அரசியல் கருத்தியல்கள் அல்லது சிந்தனைகள்
அரசியல் பாடப்பரப்பில் ஆராயப்படுகின்ற பல்வேறு எண்ணக்கருக்களுள் அரசியல் கருத்தியல்கள் தொடர;பான ஆய்வுகளும் முதன்மை வாய்ந்ததாக காணப்படுகின்றன. கருத்தியல் எனும் பதத்தினை 1796ல் (டி)ரேசி (வுசயஉல) என்பவரே முதன் முதலில் பயன்படுத்தியவராவார;. வுhந நுடநஅநவௌ ழக ஐனநழடழபல எனும் தனது நூலினூடாக கருத்தியல் பற்றிய கருத்துக்களை முன்வைத்தார;.
இதன்படி, கருத்தியல் என்பது நம்பிக்கை அல்லது புரிதலை அடிப்படையாகக் கொண்ட கருத்துக்களின் தொகுப்பாகும் அல்லது குவியலாகும். அதாவது அரசியல் சமூகத்தில், அரசியலுக்கு அழுத்தம் கொடுப்பதும், அரசியல் செயற்பாட்டிற்கும், அதன் போக்கிற்கும் வழிகாட்டுகின்றதும், சமூகத்தின் அதிகமானோரின் ஈர;ப்பையும், நம்பிக்கையையும் பெற்ற அரசியல் கருத்துக்களின் தொகுப்பே அரசியல் கருத்தியல்கள் எனப்படுகின்றன.
அரசியல் கருத்தியல்கள் சமுகத்திலுள்ள சில குழுக்களின் அரசியல் இலட்சியம், நம்பிக்கைகள் என்பவற்றை ஒழுங்குபடுத்துபவையாக உள்ளன. மேலும் சமுகத்திலுள்ள குழுக்களை அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுத்தக்கூடியவையாகவும், திசைப்படுத்தக் கூடியவையாகவும் உள்ளன.
அரசறிவியலின் ஆரம்பகாலத்திலேயே அரசியல் கருத்தியல் பற்றிய கருத்துக்கள் தோற்றம் பெற்றுக் கொண்டன. எனினும் 18ம் 19ம் நுhற்றாண்டின் பின்னர; பிரபல்யம் பெற்றவையாக மாறின.
உதாரணமாக, தாராண்மைவாதம், சமவுடைமை வாதம், ஜனநாயக வாதம், சமூக ஜனநாயக வாதம், பாசிச வாதம், அரச பொதுநல வாதம், நவ லிபரல் வாதம், தேசியவாதம் போன்ற அரசியல் கருத்தியல்கள் உலக அரசியலில் பாரிய செயற்பாடுகளை மேற்கொண்டவைகளாகும்.
தற்கால அரசியல் கருத்தியல்களின் இயல்புகளை அடிப்படையாகக் கொண்டு சமூக அரசியல், பொருளாதார ரீதியாக பின்வருமாறு வகைப்படுத்தப்படும்.
§ சமுகத்தில் நிலவுகின்ற அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு சர;வாதிகாரம்., ஜனநாயகம் எனவும்,
§ பொருளாதாரத் தன்மையைக் கொண்டு இடதுசாரி, வலது சாரி என்றும் வகைப்படுத்தப்படுகின்றது.
அரசியல் கருத்தியல் பணிகள்
01. உலக ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதை விபரித்தல்.
02. உலக ஒழுங்கை விளங்கப்படுத்தலும் மதிப்பிடுதலும்.
03. அரசியல் செயலொழுங்குகளுக்கு வழி காட்டுதல்.
04. அரசியல் நிகழ்ச்சி நிரல் தயாரித்தல்.
அரசியல் கருத்தியல்களின பண்புகள்
01. குறித்த ஒரு கருப்பொருளை மையமாகக்கொண்டது
02. சமூகத்தின் கட்டுமான அடிப்படையில் தோற்றம் பெற்றது
03. எதிர;காலம் நோக்கிய வடிவமாக காணப்படுகிறது
04. அரசியலில் செல்வாக்கு செலுத்;தும் நபர;களால் முன்வைக்கப்பட்டது
05. நடைமுறை சார; ஆட்சியின் இயல்பினைத் தீர;மானித்தல்
Comments
Post a Comment