Skip to main content

அரசியல் கோட்பாடுகள்



அரசியல் கோட்பாடுகள்


அரசியல் விஞ்ஞானத்தில் ஆய்வு செய்யப்படுகின்ற பிரதான கற்கைத் துறைகளில் அரசியல் கோட்பாடுகள் என்ற துறையும் முதன்மை பெறுகின்றது. அரசியல் என்பதும், கோட்பாடு என்பதும் இரு வெவ்வேறான பகுதிகளாகும்.  

அரசியல் என்பது அரசியல் சமுகம் ஒன்றில் நிகழ்கின்ற அரசியல் அதிகாரம் சார;ந்த போராட்டங்களும், செயற்பாடுகளும் ஆகும். கோட்பாடு என்பது ஒரு விடயத்தை ஏன்? எவ்வாறு? என்று விளக்குவதற்கு கோட்பாட்டாளர;கள் பயன்படுத்தும் கருவிகளாகும்.  

அரசியல் மற்றும் கோட்பாடு இவையிரண்டையும் இணைக்கும் செயற்பாட்டை அரசியல் கோட்பாடு மேற்கொள்கின்றது. பொதுவாக சமுகத்தில் இடம்பெறும் தோற்றப்பாடுகள் அல்லது நிகழ்வுகள் ஏன், எவ்வாறு இடம்பெறுகின்றது என்பதை தெளிவுபடுத்தவும், விபரிக்கவும் அறிஞர;கள், கோட்பாட்டாளர;கள் பயன்படுத்தும் விதிமுறைகளுடன் கூடிய கருவியே அரசியல் கோட்பாடு என அழைக்கப்படுகின்றது. 

உதாரணமாக ஆகாயத்தில் மேலே எறியப்படும் பொருள் ஏன் பு+மியை வந்தடைகின்றது? என்பதை விளக்குவதற்கு விஞ்ஞானத் துறையில் புவியீர;ப்புக் கோட்பாடு பயன்படுகின்றது. 

சந்தையில் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும் போது அவற்றின் விலை உயர;வதற்கான காரணம் என்ன? என்பதை விளக்குவதற்கு பொருளியல் துறையில் கேள்வி நிரம்பல் கோட்பாடு பயன்படுகின்றது. 

சமூகப் பரிமாற்றம் இடம்பெறும் பொழுது சில சமுகப் பிரிவுவுகளுக்கு இடையில் முரண்பாடு ஏற்படுவது ஏன்? என்பதை விளக்குவதற்கு அரசியல் விஞ்ஞானத்தில் ஒப்பீட்டு நயக் கோட்பாடு பயன்படுகின்றது. 

அரசியல் கோட்பாடானது அரசறிவியலோடு தொடர;பான ஆய்வாளர;களால் முன்வைக்கப்படுகின்றது. அவர;கள் தத்துவஞானிகளாகவோ, அல்லது வரலாற்று ஆய்வாளர;களாகவோ அல்லது பொருளியல்வாதிகளாகவோ, அல்லது சமயவாதிகளாகவோ காணப்படலாம். 

இதன் காரணமாகவே குறித்த ஒரு அரசியல் கோட்பாடு அவர;களது கருத்துச்சாயங்களுக்கு உட்பட்டதாக வெளிப்படுகின்றது. உதாரணமாக,

· தெய்வீக உரிமைக் கோட்பாடு சமயவாதிகளின் தாக்கத்திற்கு உட்பட்டதாகும். 

· சமூக ஒப்பந்தக் கோட்பாடு சமூகவியலாளர;களின் தாக்கத்திற்கு உட்பட்டதாகும்.

· படிமுறை வளர;ச்சிக் கோட்பாடு வரலாற்று ஆய்வாளர;களின் தாக்கத்திற்கு உட்பட்டதாகும்.

· தாராளவாத சோசலிசவாத கேட்பாடு பொருளியலாளர;களின் தாக்கத்திற்கு உட்பட்டதாகும்.

அரசறிவியலில் ஆய்வுகளில் பயன்படும் அரசியல் கோட்பாடுகள் இரு வகைப்படுகின்றன.

i. இலட்சிய கோட்பாடு (நியதிவாதக் கோட்பாடு) (ழேசஅயவiஎந வுhநழசல) 

ii. விஞ்ஞான (தர;க்க) ரீதியான கோட்பாடு (ளுஉநைவெகைiஉ வுhநழசல) 

இலட்சிய கோட்பாடு (நியதிவாதம்) (ழேசஅயவiஎந வுhநழசல) 

1. இலட்சிய கோட்பாடு என்பது அரசியல் தோற்றப்பாடு ஒன்றினை அரசியல் தத்துவம், அரசியல் சிந்தனையின் அடிப்படையில் விளக்குவதாகும்.

2. இலட்சியக் கோட்பாடு கிரேக்க காலத்திலிருந்து பிளோட்டோ முதல் இன்றுவரை அரசியல் விசாரணைகளில் காணப்படுகின்றது. 

3. இலட்சியக் கோட்பாடுகள் பிரதானமாக அரசியல், அரசு, அரசியல் அதிகாரம், ஆட்சிசெய்தல் மற்றும் சமுகக் கொள்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை முன்வைக்கும் சிந்தனைகளையும், தத்துவங்களையும் மூலக்கொள்கைகளாக கொண்டு முன்வைக்கப்பட்டுள்ளன. 

உதாரணம்: 

· அரசு தொடர;பான அரிஸ்டோட்டலின் கோட்பாடு

· சமூக ஒப்பந்தம் தொடர;பான ஹொப்ஸ் மற்றும் லொக் ஆகியோரின் கோட்பாடு,

· அதிகாரம் தொடர;பான லிபரல்வாதிகளின் கோட்பாடு

· சட்டம் தொடர;பான ஜோன் ரோல்ஸின் கோட்பாடு

· குடியரசுவாத சுதந்திரம் தொடர;பான பிலிப் பெட்டியின் கோட்பாடு

விஞ்ஞான (தர;க்க) ரீதியான கோட்பாடு (ளுஉநைவெகைiஉ வுhநழசல) 

அரசியல் விஞ்ஞானத்தில் விஞ்ஞானக் கோட்பாட்டின் அறிமுகம் 1930களில் இடம்பெற்றது. இந்த காலகட்டத்தில் சமூக விஞ்ஞானங்களில் இயற்கை விஞ்ஞானத்தால் ஈர்க்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டன, இது சமுக விஞ்ஞானங்களில் “அறிவியல் திருப்பம்” என்று அழைக்கப்படுகிறது. 

இயற்கை விஞ்ஞானங்களில் கோட்பாடு என்பது எவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டதோ அவ்வாறே சமுக விஞ்ஞானங்களிலும் இக்காலப்பகுதிகளிலும் புரிந்து கொள்ளப்பட்டது. சமுக விஞ்ஞானங்களிலும் மற்றும் அரசியல் அரசியல் விஞ்ஞானத்திலும் பயன்படும் விஞ்ஞானக் கோட்பாடு என்றால் என்ன? 

அரசியல் விஞ்ஞானக் கோட்பாடு என்பது சட்டம் (விதி) போன்ற ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் (டுயற டமைந சநபரடயசவைநைள) சமுகத்தில் ஏன்? எவ்வாறு இடம்பெறுகின்றது? என்பதை விளக்குவதாகும். ஆகவே அரசியல் விஞ்ஞானக் கோட்பாடுகளின் நோக்கம் அரசியல் உலகில் நிகழும் தோற்றப்பாடுகளை விளங்கிக் கொள்வதற்கு அவ்வாறான சட்டங்களை அல்லது விதிகளை கட்டியெழுப்புவதாகும். அதன்படி இங்கு சட்டம் (டுயற) என்பது அரசியல் உலகில் என்ன நடக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ள பயன்படுகின்றவையாகும். 

அரசியல் விஞ்ஞானக் கோட்பாடுகளுக்கும், தத்துவார;த்க் கோட்பாடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பல காணப்படகின்றன. குறிப்பாக, அரசியல் விஞ்ஞானக் கோட்பாடுகள் அனுபவ தரவு மற்றும் சான்றுகளின் அடிப்படையில் (அதாவது உண்மைகள் மற்றும் அவதானிப்புகள்) கட்டியெழுப்பப்பட்டவையாகும். ஆனால் தத்துவார;த்தக் கோட்பாடுகள் பெரும்பாலும் கோட்பாட்டாளரின் தனிப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் பெறுமானத் தீர்ப்புகளுக்கு உள்ளாகின்றது. 

அரசியல் விஞ்ஞானத்தில் விஞ்ஞானக் கோட்பாடுகளைப் பயன்படுத்தும் சம்பிரதாயம் நேர;கணிய அரசியல் கோட்பாடுகள் என குறிப்பிடப்படுகிறது. நேர;கணிய அரசியல் கோட்பாடுகள் என்பது விஞ்ஞானக் கோட்பாடுகளையே குறிக்கின்றது. 

நேர;கணியம் என்பது அனுபவவாதத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும் அவதானிப்பு மற்றும் சான்றுகளை குறிக்கின்றது. இதன்படி, பின்வருவன அரசியல் விஞ்ஞானக் கோட்பாடுகளுக்கு பிரதானமான உதாரணங்களாகும்.

· தாராண்மை அரசியல் கோட்பாடு 

· குடியரசுவாத அரசியல் கோட்பாடு 

· மாக்சியவாத அரசியல் கோட்பாடு 

· பின் மாக்சியவாத கோட்பாடு 

· அரசியல் நவீனமயமாதல் கோட்பாடு 

· பெண்ணியல்வாத அரசியல் கோட்பாடு 

· பின் நவீனத்துவ ஃ பின் கட்டமைப்புவாத அரசியல் கோட்பாடு 

· பின்காலனித்துவ அரசியல் கோட்பாடு 


Comments

Popular posts from this blog

மதிப்பீட்டுச் செயற்பாடு மற்றும் நியதிவலைச் சட்டகம் தயாரித்தல்

  மதிப்பீட்டுச் செயற்பாடு மற்றும் நியதிவலைச் சட்டகம் தயாரித்தல் 

அரசியல் கருத்தியல்கள் அல்லது சிந்தனைகள்

அரசியல் கருத்தியல்கள் அல்லது சிந்தனைகள் அரசியல் பாடப்பரப்பில் ஆராயப்படுகின்ற பல்வேறு எண்ணக்கருக்களுள் அரசியல் கருத்தியல்கள் தொடர;பான ஆய்வுகளும் முதன்மை வாய்ந்ததாக காணப்படுகின்றன. கருத்தியல் எனும் பதத்தினை 1796ல் (டி)ரேசி (வுசயஉல) என்பவரே முதன் முதலில் பயன்படுத்தியவராவார;. வுhந நுடநஅநவௌ ழக ஐனநழடழபல எனும் தனது நூலினூடாக கருத்தியல் பற்றிய கருத்துக்களை முன்வைத்தார;. 

இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு (1978)

 இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு (1978)