Skip to main content

அரசியல் நிறுவனங்கள்









அரசியல் நிறுவனங்கள்

அரசறிவியலின் உபதுறைகளில் ஒன்றாகவும் மிகவும் முதன்மைவாய்ந்த பிரிவாகவும் அரசியல் நிறுவனங்கள் எனும் அம்சம் ஆராயப்படுகின்றன. அரசியல் ஆய்வுகளில் அரசியல் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படுவதற்கு இரண்டு விடயங்கள் பிரதானமாகும்.

ஐ. சமூகத்தில் அரசியல் இயல்பாகவே பல்வேறு வடிவங்;களில் நிறுவனமயப்படுத்தப்பட்டு உள்ளது. 

ஐஐ. பெரும்பாலான அரசியல் செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் அரசியல் நிறுவனங்களை சார;ந்தே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொருளியல், சமூகவியல், மற்றும் சட்டம் போன்ற சமுகக் கற்கைத் துறைகள் பலவற்றிலும் நிறுவனங்கள் பற்றிய ஆய்வுகள் மீது அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. நிறுவனங்கள் தொடர;பாக கற்கும்போது, அதில் சட்டரீதியான விதிமுறைகள், நடத்தைகள் என்பனவற்றை உள்ளடக்கிய அமைப்பாகவே உள்ளன. 

நிறுவனங்கள் என்பன சமுகத்தில் குறிப்பிட்ட இலக்குகளையும், நோக்கங்களையும் அடைவதற்காக கட்டியெழுப்பப்பட்ட ஒழுங்கமைப்புக்களாகும். பொதுவாக சமுகத்தில் காணப்படும் நிறுவனங்களை இரண்டாக வகைப்படுத்துவர;.

ஐ. முறைசார; நிறுவனங்கள் (குழசஅயட) 

ஐஐ. முறைசாரா நிறுவனங்கள் (ஐகெழசஅயட)

முறைசார; நிறுவனங்கள்

இவை முறையான சட்ட திட்டங்கள், நபர;கள் மற்றும் கட்டிடங்கள் என்பவற்றுடன் கூடிய கண்ணுக்குப் புலப்படும் நிறுவனங்களாகும். உதாரணமாக, பாடசாலை, பல்கலைக்கழகம், நகரசபை, பாராளுமன்றம் போன்ற நிறுவனங்கள் முறைசார;ந்தவையாகும். 

முறைசாரா நிறுவனங்கள்: 

இவ்வகை நிறுவனங்கள் கண் முன் புலப்படாவிடினும் அதன் இருப்பு செயற்பாடுகள் மற்றும் பெறுபேறுகளை கண்டுக்கொள்ள முடியும். உதாரணமாக, குடும்பம், உறவுமுறை, குலம், சாதி, தந்தை தலைமைத்துவம் போன்றன சமுகத்தில் காணப்படும் முக்கிய நிறுவனங்களானாலும், இவை முறைசாரா இயல்பிலேயே காணப்படுகின்றன.


Comments

Popular posts from this blog

மதிப்பீட்டுச் செயற்பாடு மற்றும் நியதிவலைச் சட்டகம் தயாரித்தல்

  மதிப்பீட்டுச் செயற்பாடு மற்றும் நியதிவலைச் சட்டகம் தயாரித்தல் 

அரசியல் கருத்தியல்கள் அல்லது சிந்தனைகள்

அரசியல் கருத்தியல்கள் அல்லது சிந்தனைகள் அரசியல் பாடப்பரப்பில் ஆராயப்படுகின்ற பல்வேறு எண்ணக்கருக்களுள் அரசியல் கருத்தியல்கள் தொடர;பான ஆய்வுகளும் முதன்மை வாய்ந்ததாக காணப்படுகின்றன. கருத்தியல் எனும் பதத்தினை 1796ல் (டி)ரேசி (வுசயஉல) என்பவரே முதன் முதலில் பயன்படுத்தியவராவார;. வுhந நுடநஅநவௌ ழக ஐனநழடழபல எனும் தனது நூலினூடாக கருத்தியல் பற்றிய கருத்துக்களை முன்வைத்தார;. 

இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு (1978)

 இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு (1978)