இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு (1978)
அறிமுகம்
இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்யாப்பு இலங்கையில் உருவாக்கப்பட்ட இரண்டாவது குடியரசு யாப்பாகும். 1972ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த முதலாம் குடியரசு யாப்பை விடவும் இந்த இரண்டாம் குடியரசு யாப்பு பல்வேறு வியடங்களில் வேறுபட்டுக் காணப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியினதும், து.சு ஜெயவர;த்தனவினதும் நீண்டகால நோக்கமாகக் காணப்பட்ட ஜனாதிபதி ஆட்சிமுறையுடனான புதிய அரசியலமைப்பு பல புதிய அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று வரை 21 திருத்தங்களுடன் (2022 ஒக்டேபர; 21) நடைமுறையில் உள்ளது.
இலங்கையில் இதற்கு முன்னர; நிவவிய பாராளுமன்ற ஆட்சி முறையிலும், முதலாம் குடியரசு யாப்பிலும் அதிருப்தி கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் ஊடாக பாராளுமன்ற முறையை உள்ளடக்கிய ஜனாதிபதி ஆட்சி முறையையும், முதலாளித்துவ ஜனநாயக ஏற்பாடுகளையும் நடைமுறைப்படுத்த விரும்பியது.
இரண்டாம் குடியரசு யாப்பு ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அரசாங்க முறைகளை கொண்ட ஒரு கலவையாக காணப்படுகின்றது. இதில் முதலாம் குடியரசு யாப்பில் உள்ள சில விடயங்கள் மாற்றங்களுடன் தொடர;ந்து இடம் பெறுவதோடு புதிய விடயங்கள் பலவும் காணப்படுகின்றன.
1977ஆம் ஆண்டு பொதுத் தேர;தலுக்கான விஞ்ஞாபனத்தில் ஜனாதிபதி ஆட்சி முறையை கொண்ட புதிய யாப்பை உருவாக்குவதற்கான மக்கள் சம்மதத்தை ஐக்கிய தேசிய கட்சி கோரியிருந்தது. இதன்படி தேர;தலில் அக்கட்சிக்கு கிடைக்கப்பெற்ற 5ஃ6 பங்கு ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டு (140ஃ168) முதலாம் குடியரசு யாப்பை நீக்கி இரண்டாம் குடியரசு யாப்பை உருவாக்கிக் கொண்டது.
1978.08.31ஆம் திகதி தேசிய அரசுப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு 1978.09.08 ஆம் திகதி இவ்யாப்பு நடைமுறைக்கு வந்தது. இரண்டாம் குடியரசு யாப்பு 24 அத்தியாயங்களையும், 172 உறுப்புகளையும் கொண்டது.
இரண்டாம் குடியரசு யாப்பின் உருவாக்கத்திற்கான காரணங்கள் ஃ பின்னணிகள்
இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு தோன்றுவதற்கு பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் மிக முக்கியமானவையாக பின்வரும் மூன்று காரணங்கள் அமைகின்றன.
01. முதலாம்(1972) குடியரசு யாப்பில் காணப்பட்ட குறைபாடுகள்.
02. ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால இலக்கு.
03. 1977 ஐக்கிய தேசிய கட்சி பொதுத் தேர;தலில் பெற்றுக்கொண்ட பெருவெற்றி
01. முதலாவது குடியரசு யாப்பில் காணப்பட்ட குறைபாடுகள்
1970 ஆம் ஆண்டு தேர;தலில் ஐக்கிய முன்னணி அரசாங்கம் 50 வீதத்திற்கும் குறைவான வாக்கினை பெற்றிருந்தது. இதனால் அவர;களால் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பும் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்ற ஒரு அரசியல் யாப்பாகக் காணப்படவில்லை. மேலும் அரசியல் திட்டத்தை உருவாக்குவதற்கான ஆணையினை ஐக்கிய முன்னணி அரசாங்கம் மக்களிடம் தேர;தலின் மூலம் பெற்றுக் கொள்ளவில்லை. இவ்வாறு 1972 ஆம் ஆண்டு அரசியல் திட்டத்தை உருவாக்கியமை ஐக்கிய முன்னணி அரசாங்கம் மக்களுக்கு இழைத்த துரோகம் என ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் சுட்டிக்காட்டியது.
அது மட்டுமல்லாது அவசரகால சட்டம் நடைமுறையில் இருந்த காலத்திலேயே அரசியல் யாப்பு வரையப்பட்டது. இதனால் மக்களின் அரசியல் யாப்பு தொடர;பான அபிப்பிராயத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் முதலாம் குடியரசு அரசியல் திட்டத்தில் பின்வரும் பிரதானமான குறைபாடுகள் பலராலும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
· சட்டமன்றமான தேசிய அரசுப்பேரவையிடம் முத்துறைசார; அதிகாரங்களும் குவிக்கப்பட்டு அதிகார மேலாதிக்கம் கொண்ட நிறுவனமாக தொழிற்பட்டமை. (வலுக்குவிப்பு காணப்பட்டமை)
· அரச கொள்கை வழிகாட்டித் தத்துவங்கள் சட்டப் பெறுமதியற்றவையாக விளங்கியமை.
· அடிப்படை உரிமை, சுதந்திரங்கள் வழங்கப்பட்டாலும் அவை உத்தரவாதப்படுத்தப்படவில்லை.
· பொதுச்சேவை, நீதிச் சேவை அமைப்புக்கள் அமைச்சரவையின் அதிகாரத்தின் கீழ் அதிகாரமற்ற அமைப்புகளாகச் செயற்பட்டமை.
· சிங்கள மொழிக்கும், பௌத்த சமயத்துக்கும் அரசியல் யாப்பில் முக்கியத்துவம் வழங்கப் பட்டமையானது விமர;சனத்துக்குரிய ஒன்றாக காணப்பட்டது.
· அரசியலமைப்பு நீதிமன்றத்தினால் அரசியல் அமைப்பை பாதுகாக்க முடியாமை
· நீதித்துறை சுதந்திரமான துறையாக செயற்பட முடியாமையும் நீதிப்புனராய்வு அதிகாரத்தைக் கொண்டிராமையும்
· எளிய பெரும்பான்மை தேர;தல் முறைகொண்டிருந்த பல்வேறு குறைபாடுகள்
· முதலாம் குடியரசு யாப்பு பெரும்பாலும் சோல்பரி யாப்பை அடியொட்டியதாகவே காணப்பட்டமை.
02. ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால இலக்கு
ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதித்துவ அரசாங்க முறையினை ஏற்படுத்த வேண்டும் என்று மிக நீண்டகாலம் விரும்பி வந்தமை, ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான து.சு ஜெயவர;தன சிங்கப்பு+ர;,வட கொரியா போன்ற நாடுகள் அபிவிருத்தி அடைந்தமைக்கு இத்தகைய ஜனாதிபதித்துவ அரசாங்க முறையே காரணம் எனவும், தனது தேசிய அரசியலில் தலைமைத்துவத்தை வளர;ப்பதற்கான ஒரு உபாயமாக புதிய அரசியல் திட்டத்தில் ஜனாதிபதித்துவ அரசாங்க முறையினை அறிமுகம் செய்தார;.
03. 1977 இல் ஐக்கிய தேசிய கட்சி பொதுத் தேர;தலில் பெற்ற பெரும் வெற்றி
ஐக்கிய தேசியக் கட்சியானது 1977 இல் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு பொதுத் தேர;தலில் மொத்தமாக 168 ஆசனங்களில் 2ஃ3 பங்கு பெரும்பான்மைக்கு அதிகமான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டமை அரசியல் திட்டத்தினை உருவாக்குவதற்கு மிகவும் முக்கியமான காரணியாகக் காணப்பட்டது.
இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக சிறுபான்மை தமிழர;களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழர; விடுதலைக் கூட்டணி எதிர;க்கட்சியாகவும் (1978 -1988) அதன் தலைவர; தி.எ.அமிர;தலிங்கம் எதிர;க்கட்சித் தலைவராகவும் காணப்பட்டார;. பதவியேற்ற இரண்டு மாதத்திலேயே ஐக்கிய தேசிய கட்சி புதிய அரசியல் யாப்பினை உருவாக்க ஆரம்பித்தது.
இதில் அமெரிக்க ஜனாதிபதி அரசாங்க முறையும், பிரான்ஸ் பிரித்தானியா நாடுகளிலிருந்து கலப்பு மந்திரி சபையும், ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையும், அவுஸ்திரேலியா சுவிஸ்லாந்து பெல்ஜியம் போன்ற நாடுகளிலிருந்து மக்கள் தீர;ப்பு முறையினையும் கொண்டதாக இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு வரையப்பட்டது.
அரசியல் யாப்பு மாதிரி 1978 ஜூலை 25ஆம் திகதி தேசிய அரசுப் பேரவையின் சமர;ப்பிக்கப்பட்டது. அதனை நிறைவேற்ற 137 ஆதரவான வாக்குகள் அளிக்கப்பட்டன. எவரும் எதிர;த்து வாக்களிக்கவில்லை சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழர; விடுதலைக் கூட்டணி ஆகிய இரண்டு கட்சிகளும் வாக்கெடுப்பின்போது கலந்து கொள்ளவில்லை. ஓகஸ்ட் 31 ஆம் திகதி சபாநாயகர; அரசியல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார;. 1978 செப்டம்பர; 08ஆம் திகதி இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்தது. இவ் அரசியல் யாப்பு இதுவரை காலமும் 21 திருத்தங்களுக்கு உட்பட்டு இலங்கையில் இன்றுவரை நடைமுறையில் உள்ளது.
Comments
Post a Comment