Skip to main content

அரசறிவியலில் உள்ளடக்கப்படும் உபதுறைகள்







அரசறிவியலில் உள்ளடக்கப்படும் உபதுறைகள்


அறிமுகம்


அரசறிவியலானது சுமார; 2500 வருடங்களாக வளரச்;சியடைந்து, பரிணாமம் பெற்றுள்ள புலமைசார;ந்த கற்கையாகும். இக்கற்கை நெறியானது மிகவும் பரந்துபட்ட பாடப்பரப்பை உடைய துறையாகக் காணப்படுவதுடன், இயங்கு தன்மையுடைய பண்பையும் கொண்டதாக விளங்குகின்றது.


புராதன கிரேக்க காலத்திலிருந்து அரசறிவியல் வளர;ச்சி அடைந்து பல கற்றல் பிரிவுகளை உள்ளடக்கி வளர;ச்;சியடைந்து வந்துள்ளது. அதனடிப்படையில் இன்று அரசியல் விஞ்ஞானத்தில் பல பிரிவுகள் பல உபதுறைகளாக் காணப்படுவதைக் குறிப்பிடலாம்.


i.       அரசியல் தத்துவம்


ii.     அரசியல் கருத்தியல்கள்


iii.   அரசியல் கோட்பாடுகள்


iஎ.   அரசியல் நிறுவனங்கள்


எ.     ஒப்பீட்டு அரசியல்


                          அரசியல் தத்துவம்         


புராதன காலத்திலிருந்து தற்காலம் வரை அரசியல் ஆய்வு உள்ளடக்கும் முதன்மையான உப பிரிவாக அரசியல் தத்துவம் காணப்படுகின்றது. தத்துவம் என்பது இறுதி இலக்கினை முதலில் தீர;மானித்துவிட்டு அவ்விலக்கினை அடையும் நோக்கில் அது சார;ந்த கருத்துக்களினை முன்வைப்பதை குறிக்கின்றது.


அந்த வகையில் அரசியல் தத்துவம் என்பதனை அரசியல் விதிகள் அல்லது கொள்கைகளின் தொகுப்பு எனலாம். அரசியலினை ஆய்வு செய்வதற்குத் தத்துவம் இன்றியமையாததாகும். அதே நேரம் முழுமையாக அரசியல் கற்கையை தத்துவத்தினூடக மட்டும் கற்று விட முடியாது. எனினும் இது அரசறிவியல் கற்கையில் முதன்மையாக ஆய்வு செய்யப்படும் ஒரு பிரதான பிரிவாகும்.


அரசியலுக்கும் தத்துவத்திற்குடையிலான இடையிலான தொடர;பு மிக நீண்;ட கால வரலாற்றை உடையதாகும். ஆரம்ப கிரேக்க காலத்திலிருந்து பிளேட்டோ முதல் இந்த தொடர;பினை ஏற்படுத்துவதில் பல அரசியல் அறிஞர;கள் பங்களிப்பு செய்துள்ளனர;.


குறிப்பாக கிரேக்க காலத்தில் அரசியல் தத்துவம் சார;ந்த ஆய்வாகவே வளர;ச்சி அடைந்து வந்தது. இது தவிர மத்திய கால ஐரோப்பாவில் ரூசோ, மெக்ஸ்வெபர;, மொண்டஸ்கியு+, போல் ஜெனட், மக்கியாவல்லி போன்றோரின் பங்களிப்பினையும் குறிப்பிட முடியும். அதேபோன்று புராதன சீனாவில் கொன்பியுசியஸ், இந்தியாவில் கௌடில்லியர;, ஈரானில் ஆயத்துள்ளா கொய்மேனி போன்றோரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாகும்.


மனிதன் செல்வாக்குச் செலுத்துகின்ற ஒவ்வொரு துறைகளிலும் தத்துவம் தவிர;க்க முடியாதது. இதனால் தத்துவம் மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாததாக மாறியுள்ளது. அரசியல் விஞ்ஞானத்தில் அரசிளயல் எண்ணக்கருக்களை விசாரணை செய்வதற்கு அரசியல் தத்துவம் எனும் பகுதி வளர;ச்சி பெற்றுள்ளது.


அரசியல் தத்துவம் கவனம் செலுத்தும் பிரதான கருப்பொருள்கள்


1.   அரசியல் ஆய்வில் பயன்படுத்தப்படுகின்ற அடிப்படை எண்ணக்கருக்களின் அர;த்தங்களை தெளிவுபடுத்துகின்றது. குறிப்பாக இவைகளின் விளக்கம் தொடர;பாக விசாரணையை தத்துவத்தின் மூலமாக மேற்கொள்கின்றது.


உதாரணம்: அரசு, அரசாங்கம், குடியுரிமை, சுதந்திரம், சமத்துவம், உரிமைகள்


2.   அரசியல் உலகில் நிலவுகின்ற அடிப்படை பிரச்சினைகளை எழுப்பி தீர;வு காணல்.


உதாரணம்: அரசியல் என்றால் என்ன? அரசு என்றால் என்ன? அரசு எவ்வாறு தோன்றியது? அரசு ஏன் அவசியம்? அரசின் பணிகள் எவை?


3.   அரசியல் சமுகத்திற்கு தேவையான அரசியல் செயற்பாடு, அரசியல் நிறுவனங்கள், பொதுக் கொள்கைகள் ஆகியவற்றிற்கு வழிகாட்டும் இலட்சியக் கருத்துக்களை (தத்துவக் கருத்துக்களை) முன்வைத்தல்.


உதாரணம் : சுதந்திரம், சமத்துவம், நியாயம்


     அரசியல் ஆய்வுகளில் காலத்துக்குக் காலம் பல்வேறு தத்துவங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் அரசியல் தத்துவஞானிகள் இடையே பொதுமைப்படுத்தப்பட்ட கருத்துக்கள் நிலவாமையாகும். குறிப்பாக ஒரு தத்துவத்தினை முன்வைக்கும் போது அதன் அடிப்படைக் கருப்பொருள் முக்கியமானதாகும். உதாரணமாக அரசு தொடர;பான தத்துவம் முன்வைக்கப்படும் போது அரசு எனும் கருப்பொருள் முக்கியம் பெறுகின்றது.

Comments

Popular posts from this blog

மதிப்பீட்டுச் செயற்பாடு மற்றும் நியதிவலைச் சட்டகம் தயாரித்தல்

  மதிப்பீட்டுச் செயற்பாடு மற்றும் நியதிவலைச் சட்டகம் தயாரித்தல் 

அரசியல் கருத்தியல்கள் அல்லது சிந்தனைகள்

அரசியல் கருத்தியல்கள் அல்லது சிந்தனைகள் அரசியல் பாடப்பரப்பில் ஆராயப்படுகின்ற பல்வேறு எண்ணக்கருக்களுள் அரசியல் கருத்தியல்கள் தொடர;பான ஆய்வுகளும் முதன்மை வாய்ந்ததாக காணப்படுகின்றன. கருத்தியல் எனும் பதத்தினை 1796ல் (டி)ரேசி (வுசயஉல) என்பவரே முதன் முதலில் பயன்படுத்தியவராவார;. வுhந நுடநஅநவௌ ழக ஐனநழடழபல எனும் தனது நூலினூடாக கருத்தியல் பற்றிய கருத்துக்களை முன்வைத்தார;. 

இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு (1978)

 இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு (1978)